மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை கேரவனாக மாற்றிய ஜோடி.. இத்தணூன்டு காரை இப்படி மாற்ற முடியுமா? சாதிச்சிருக்காங்க!
இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்-ம் ஒன்றாகும். இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் மாடல்களிலும் இது ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்கும் வசதிக் கொண்ட கேரவனாக மாற்றி இருக்கின்றனர்.
இந்த குடும்பத்தினர் மாற்றி இருப்பது 2020 மாடல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். இவர்கள் அதிகம் டிராவலை மேற்கொள்ளும் குடும்பத்தினர் ஆவர். ஆகையால், இவர்கள் ஒவ்வொரு முறையும் வெளியில் செல்லும்போது தங்கும் விடுதிக்காக மிகப் பெரிய அளவில் செலவு ஏற்பட்டு இருக்கின்றன. இந்த பெரும் செலவு காரணமாக பயணத்தை மேலும் விரும்பியபடி செய்யாமல் போயிருக்கின்றது.
இதன் விளைவாகவே, தங்களுக்கு ஏற்படும் இந்த பெரும் செலைவைக் குறைக்கும் பொருட்டு இந்த ஜார்கண்டைச் சேர்ந்த தம்பதியினர் தங்களுடைய காரையே கேம்பர் வேனாக மாற்ற திட்டமிட்டு இருக்கின்றனர். இதன்படி தங்களின் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை அவர்கள் தங்கும் வசதிக் கொண்ட ஓர் நடமாடும் வீடாக மாற்றி இருக்கின்றனர்.
இந்த மாற்றத்தால் அது நட்சத்திர விடுதிகளுக்கு இணையான மாற்றி இருக்கின்றது. காரில் இடம் பெற்றிருக்கும் நவீன வசதிகள் இவ்வாறு கூற உகந்ததாக இருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், ஸ்விஃப்ட் காரில் உள்ள நவீன வசதிகளுடன் சேர்த்து அதில் தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதனால் இது நட்சத்திர விடுதிகளுக்கே டஃப் கொடுக்கும் ஓர் விடுதியாக மாறி இருக்கின்றது.
தங்கும் வசதியை மட்டுமே இந்த காரில் தம்பதியினர் வழங்கி இருக்கின்றனர். குளியல் அறை, கழிவறை ஆகியவற்றை கேம்பர் வசதியின் வாயிலாக வெளியே மேற்கொள்ளும்படி அவர்கள் ரெடி செய்திருக்கின்றனர். எனவே நீண்ட தூரம் மற்றும் கேம்ப் செய்யும் பயணங்களுக்கு உகந்த வாகனமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காட்சியளிக்கின்றது.
அதேவேளையில், நிம்மதியாக படுத்து உறங்குவதற்கான வசதி காரின் உட்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன் மீது மெத்தையை விரிக்கும் பொருட்டே இந்த வசதிக் கொண்ட இருக்கைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இது ஓர் ஹேட்ச்பேக் கார் என்பதால் இரண்டு பேர் மட்டுமே தாராளமாக பயணிக்க முடியும். அதேவேளையில், சிறுவர் ஒறுவரும் இதில் படுத்துக் கொள்ள முடியும். இத்துடன், அத்தியாவசிய பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவாக ஸ்டோரேஜும் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதாக அந்த தம்பதியினர் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆகையால், நீண்ட தூர டிராவலின் போது உணவை சமைத்து சாப்பிடவும் இந்த கார் மிகுந்த உதவியாக இருக்கும். இதற்கான சகல வசதிகளும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக 10 லிட்டர் தண்ணீரை சேகரிப்பதற்கான வசதியும் காரில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
இதுதவிர, மின்சார வசதிக்காக சிறிய கார் இன்வெர்ட்டரும் ஸ்விஃப்ட்டில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், எந்தவொரு தேவைக்கும் அவர்கள் மற்றவர்களை நாட வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. இத்தகைய சூப்பரான வசதிமிக்க காராகவே இந்த ஸ்விஃப்ட் கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. இது பலருக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.