உபி-ல அவரு வெறும் எம்எல்ஏ-தான்.. என்னங்க சொல்றீங்க ஒரு ராஜா கணக்கா இருக்காரு.. இத்தன கார்களையா வச்சிருக்காரு!
குந்தா எனும் சட்டமன்ற தொகுதியை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?.. அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த தொகுதி ஏற்கனவே பரீட்சையமாகி இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இந்த தொகுதியை ஒரே ஒரு நபரே நீண்ட காலமாக ஆண்டுக் கொண்டு இருக்கின்றார்.
இத்தனைக்கும் அவர் இந்தியாவின் மாபெரும் கட்சிகளான காங்கிரஸ், பாஜக போன்ற எந்தவொரு பெரிய கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. இருப்பினும், 1993 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை ஒரு நபரே குந்தா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகின்றார். ரகுராஜ் பிரதாப் சிங், என்பவரே அவர் ஆவார்.
இவர் சமீபத்திலேயே ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) எனும் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கும் முன்னர் வரை அவர் சுயேட்சை வேட்பாளராகவே அரசியலில் களம் கண்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களைக் காட்டிலும் பலமடங்கு அதிக வாக்குகளைப் பெற்று இவர் வெற்றி பெற்றிருக்கின்றார்.
ஆகையால், அந்த தொகுதியின் அசைக்க முடியாத வேட்பாளராக ரகுராஜ் பிரதாப் சிங் மாறியிருக்கின்றார். சினிமாவில் சில காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ரவுடிகளாக இருப்பவர்கள் விரைவில் அரசியலில் சேர்ந்து பெரும் புள்ளியாக மாறுவது அல்லது அரசியலுக்காக மிகப் பெரிய சம்பவங்களைச் செய்வது போன்ற கதைக் களத்தை நாம் சினிமாவிலேயே பார்த்திருப்போம்.
இந்த கதை களம் ரகுராஜ் பிரதாப் சிங்கிற்கு பொருந்தும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள் சிலர். இதற்கு ஏற்ப இவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஏன், இவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் உபி காவல்துறை சிறையில்கூட அடைத்திருக்கின்றது.
இத்தகைய பின்னணியைக் கொண்டவரே ரகுராஜ் பிரதாப் சிங் ஆவார். இவரை உத்தர பிரதேச மக்கள் ராஜா பையா (ராஜா அண்ணா) என்று அழைக்கின்றனர். இத்தகைய ஓர் நபரே மிகப் பெரிய கார் காதலர் என்கின்ற தகவல் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ரகுராஜ் பிரதாப் சிங் இடத்தில் இருக்கும் விலை உயர்ந்த மற்றும் ஆடம்ப கார்கள் சிலவற்றை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. முக்கிய இவர் லேண்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றார். இந்த நிறுவனத்தின் இரண்டு முக்கிய தயாரிப்புகள் அவரிடத்தில் உள்ளன. இதுபோன்று அவரிடத்தில் இன்னும் என்னென்ன கார் மாடல்கள் இருக்கின்றன. இதுபோன்ற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser): இந்தியாவில் சமீபத்திலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. ஆனால், ரகுராஜ் பிரதாப் வைத்திருப்பது முந்தைய வெர்ஷன் ஆகும். அதாவது, 2017-19 காலகட்டத்தில் விற்பனைக்குக் கிடைத்த லேண்ட் க்ரூஸர் ஜே200 வெர்ஷன் ஆகும். இது நிறுவனத்தின் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான கார் மாடலாகும்.
உலக சந்தையிலும் இந்த கார் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவியது குறிப்பிடத்தகுந்தது. இதன் மதிப்பு ரூ. 1.47 கோடிக்கும் அதிகம் ஆகும். லேண்ட் க்ரூஸர் ஜே200-இல் 4.5 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 263 பிஎஸ் மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes-Benz S-Class): ரகுராஜ் பிரதாப் இடம் இருந்த ஒரே ஒரு செடான் ரக கார் மாடல் இதுவாகும். இது ஆறாம் தலைமுறையின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஆகும். இதன் எஸ் 350 டி வேரியண்டையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த வெர்ஷனில் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 258 பிஎஸ் பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் மதிப்பு ரூ. 1.71 கோடிக்கும் அதிகம் ஆகும். ஆனால், இந்த காரை அவர் தற்போது விற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை என்ன காரணத்திற்காக அவர் விற்றார் என்பது பற்றிய விபரம் இதுவரை வெளியாகவில்லை.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender): இந்திய தொழிலதிபர்கள் மற்றும் திரைப் பிரபலங்களின் பிரியமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலையே தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
2020 ஆம் ஆண்டிலேயே இந்த காரை அவர் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் 110எஸ் வேரியண்டையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 2.30 கோடிக்கும் அதிகம் ஆகும். இதன் அதிக விலைக்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.
மேலும் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 5.0 லிட்டர் சூப்பர்-சார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 520 பிஎஸ் மற்றும் 625 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி (Land Rover Range Rover SUV): ரகுராஜ் பிரதாப் இடம் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, பாலிவுட் திரையுலகினர் மத்தியிலேயே மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலையூம் ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும். மிக மிக சமீபத்திலேயே இந்த காரை அவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் உயர் நிலை தேர்வையே ரகுராஜ் வாங்கி இருக்கின்றார்.
இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 400 பிஎஸ் மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
ஜீப் விராங்க்ளர் (Jeep Wrangler): பாலிவுட்டின் மற்றுமொரு பிரியமான கார் மாடலாக ஜீப் விராங்க்ளர் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலையும் ரகுராஜ் வைத்திருக்கின்றார். இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் இந்திய சந்தையில் 2021ஆம் ஆண்டில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் 2.8லிட்டர் 4சிலிண்டர் டீசல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 200பிஎஸ் மற்றும் 460என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.