ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்: மலையில் ஓய்வெடுக்கும் புலி… 15 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, அது மிகவும் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம். உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை.
சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத விளையாட்டு, திகட்டாத த்ரில்லிங் கொண்ட விளையாட்டு, அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் மறைந்துள்ள விலங்குகளை வெறித்தனமாகத் தேடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் மறைந்திருக்கும் புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் உச்சங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு நல்ல அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே உடனே பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.