மாலத்தீவு சர்ச்சை: இந்திய கடற்கரை சுற்றுலாவுக்கு ஆதரவு கோரும் மாஜி வீரர்கள்
Maldives:
சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது கருதப்பட்டது. அங்கு ஸ்நோர்கெலிங்கில் ஈடுபட்ட போது படம்பிடிக்கப்பட்ட அவரது த்ரில்லான அனுபவம் உட்பட ஏராளமான புகைப் படங்களை அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும், லட்சத்தீவில் தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த மோடி, “உங்களில் உள்ள சாகச வீரரை அரவணைக்க விரும்புவோரின் பட்டியலில் லட்சத்தீவு நிச்சயம் இருக்க வேண்டும்.” சமீபத்தில், லட்சத்தீவு மக்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.
அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். லட்சத்தீவில் இருந்து வான்வழி காட்சிகள் உட்பட சில காட்சிகள் இங்கே உள்ளன.
லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது பயணம் அமைந்தது” என்றும் தெரிவித்திருந்தார்.
விமர்சனம்
இந்நிலையில், பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவின் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் துணை அமைச்சர் மரியம், பிரதமர் மோடியை ‘கோமாளி’,‘பொம்மை’ என்று விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
இதனிடையே, பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு அமைச்சர்களின் இழிவான கருத்துகள் குறித்து இந்தியா மாலத்தீவு அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தூதர் இந்த விவகாரம் குறித்து மாலத்தீவு அரசுக்கு கொண்டு சென்றுள்ளார்.