டீ, காபிக்குப் பதிலாக… இதை குடித்து பாருங்கள்..!
மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்.
ஏழு நாட்களுக்கு நிலவேம்புக் கஷாயம்
ஏழு நாட்களுக்கு காலை, மாலை என நிலவேம்புக் கஷாயத்தைக் குடியுங்கள். கஷாயம் குடித்த அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். 200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் கொதித்து 50 மி.லி-ஆக வற்றியதும் வடிகட்டி, மிதமான சூட்டில் பருகலாம். எந்தவிதக் காய்ச்சலும் குணமாகும். காய்ச்சல் வராதவரும் ஏழு நாட்கள் தொடர்ந்து அருந்த, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல், சளி, வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
ஆவாரம் பூ
ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் அலசிய பிறகு, தண்ணீரில் கொதிக்க வைத்து எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூக்களின் இதழ்களைப் பிரித்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு, எலுமிச்சைச் சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
துளசி
துளசி இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, ஏலக்காய் தட்டிப் போட்டு, கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.
கொத்தமல்லி
கொத்தமல்லித்தழைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, சிறிது சுக்கு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
புதினா
புதினா இலைகளை நீரில் கொதிக்கவிட்டு, எலுமிச்சைப் பழச்சாறு, கருப்பட்டி கலந்து குடிக்கலாம்.
மூலிகை காபி
சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா ஆகிய வற்றை அரைத்து, காபி பொடியாகப் பயன்படுத்தலாம்.