இது தெரியுமா ? மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு மிக சிறந்த மருந்து இந்த கருப்பு ஏலக்காய்..!
ஏலக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. அவை ‘கருப்பு ஏலக்காய்’ மற்றும் ‘பச்சை ஏலக்காய்’.
இவை இரண்டில் கருப்பு ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் மணத்தால் இதை சமையலுக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கருப்பு ஏலக்காய் பச்சை ஏலக்காயை விட பெரியதாக இருக்கும். ஏலக்காய் தான் உலகிலேயே 3 வது விலையுயர்ந்த மசாலா பொருள் ஆகும். குங்குமப் பூ மற்றும் வெண்ணிலாவுக்கு அடுத்த படியாக இந்த ஏலக்காய் தான் விலையுயர்ந்த வாசனை பொருள் ஆகும்.
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
1. ஏலக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்கி வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது.
2. ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
3. அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.
4. மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
5. ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
6. விரைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படும் ஆண்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள சினியோல் என்னும் வேதிப்பொருள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
7. ஏலக்காயை அடிக்கடி தேநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். மேலும் நரம்பு தளர்ச்சி சரியாகி நரம்புகள் வலுபெறும்.
8. ஏலக்காய் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
9. ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் இரத்தம் இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது.
10. உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கசாயம் :
- கிராம்பு – 2
- கருப்பு ஏலக்காய் (இடித்தது) -4-5
- இஞ்சி (துருவியது) – 1 டீ ஸ்பூன்
- துளசி இலைகள் – 5-6
- தண்ணீர் – 3-4 கப்
தயாரிக்கும் முறை
முதலில் ஏலக்காய், கிராம்பை இடித்து ஒரு கடாயில் போட்டு வறுக்கவும், பிறகு தண்ணீர், இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு துளசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் வடிகட்டி பருகி வரவும். இதனால் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.