ஒரு வருஷத்துக்கு பென்ஸ் நிறுவனம் எத்தனை காரை விற்பனை செய்யுது தெரியுமா?
இதன்படி 2023 ஆம் ஆண்டு இதுவரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் செய்யாத விற்பனையை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முக்கியமாக 2023 ஆம் ஆண்டு இரண்டாம் பாதியிலும் கடைசி காலண்டிலும் அதிகமான விற்பனையை செய்து மிகப் பெரிய சாதனையை அனுபவம் படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்நிறுவனம் மொத்தமாக 17,408 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனையான வாகனங்களுடன் ஒப்பிடும்போது பத்து சதவீதம் வளர்ச்சியாகும். இந்நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளும் இந்நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க இந்தியாவில் கூடுதலாக ரூபாய் 200 கோடியை முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புதிய முதலீட்டை தற்போது இருக்கும் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்தவும், புதிய தயாரிப்புகளை கொண்டு வரவும், தயாரிப்பு முறையை இன்னும் நவீனப்படுத்தவும், முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிக நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி 20 சர்வீஸ் சென்டர்கள், 10 நகரங்களில் புதிய ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் 25 ஷோரூம்களை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு மாற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2024-ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு இரண்டாவது நபரும் பெண்ணாக இருக்க வேண்டும் என ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன்படி ஆண் பெண் இருவரும் சமமான அளவில் நிறுவனத்தில் பணியாற்ற முடியும் என்ற திட்டத்தை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தவும், அதேநேரத்தில் இந்தியாவில் நிறுவனத்திற்கு சொந்தமான சார்ஜிங் கட்டுமானங்களை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்த 2024 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மொத்தம் 12க்கும் அதிகமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. முக்கியமாக டாப் என்ட் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இதில் உள்ளடங்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனம் மொத்தம் 1,63,115 வாகனங்களை விற்பனை செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெறும் 5819 கார்களை மட்டுமே விற்பனை செய்து மெல்ல மெல்ல வளர்ந்த நிறுவனம் தற்போது 17 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் சமீப காலத்தில் சிறப்பான கார்களை அறிமுகப்படுத்தி நல்ல விற்பனையை பெற்று வருகிறது இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மௌச இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை வெளியிடும்போது அது வெறும் கார்களை மட்டும் விற்பனை செய்யவில்லை மக்களுக்கான அந்தஸ்தையும் சேர்த்து விற்பனை செய்கிறது. அந்நிறுவனத்தின் காரை வாங்கும்போது மக்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கிறது. இதனால் அதிகமான மக்கள் இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள்.