அதிக மைலேஜ் தரும் டாடா கார்களை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்… எல்லாரும் முட்டி மோதிகிட்டு இருக்காங்க…
இந்திய சந்தையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) கார்களை போல், எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மற்றும் சிஎன்ஜி கார்களின் (CNG Cars) விற்பனையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் சிஎன்ஜி கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன.
டாடா நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) போல் இல்லாவிட்டாலும் கூட, டாடா நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 5 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டியாகோ (Tiago), டியாகோ என்ஆர்ஜி (Tiago NRG), டிகோர் (Tigor), பன்ச் (Punch) மற்றும் அல்ட்ராஸ் (Altroz) ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்கள் ஆகும்.
இந்த 5 சிஎன்ஜி கார்களின் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான காத்திருப்பு காலம் (Waiting Period) குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காருக்கான காத்திருப்பு காலம் 8 வாரங்கள் வரையாக உள்ளது. அதாவது முன்பதிவு செய்யும் நாளில் இருந்து டெலிவரி பெறுவதற்கு, 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
அதே நேரத்தில் டாடா பன்ச் சிஎன்ஜி காரை முன்பதிவு செய்பவர்கள், டெலிவரி பெறுவதற்கு, 6 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். எஞ்சிய 3 சிஎன்ஜி கார்களும், அதாவது டியாகோ சிஎன்ஜி, டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகிய 3 கார்களும், 4 வாரங்கள் வரை காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.
நாங்கள் இங்கே கூறியுள்ள காத்திருப்பு காலமானது, பிராந்தியம் மற்றும் டீலர்ஷிப் ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே துல்லியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு அருகே உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டீலர்ஷிப்பை தொடர்பு கொள்வது நல்லது.