என்ன விஜய் இதெல்லாம்.. நீங்களே இப்படி செய்யலாமா? இணையத்தில் கசிந்த தகவலால்.. டென்ஷனான பேன்ஸ்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The GOAT படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது.
இந்த படத்தில், விஜய் உடன், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, ஜெயராம், பார்வதி நாயர், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, வைபவ், ஆகாஷ் அரவிந்த் உட்பட நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த கோவளத்தில் நடந்து வரும் நிலையில், விஜய் குறித்து வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை டென்ஷனாக்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் விஜய், லியோ மற்றும் பார்த்திபன் என்கிற இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், படம் வசூலை அள்ளியது.
லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘GOAT’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சியுடன் பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது. சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் படப்படிப்பு நடத்தப்பட்டது.
தளபதி 68 G.O.A.T: G.O.A.T (The Greatest Of All Time) என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் முதல் ஷெட்யூலுடன் தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்புக்குப் பிறகு, படக்குழுவினர் படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் செல்ல உள்ளனர். அதன்பின் 2024 பிப்ரவரியில் ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். GOAT படத்தின் மொத்த படப்பிடிப்பையும் மார்ச்சில் முடிந்து விட்டு, ஏப்ரல் மாதம் மீதம் இருக்கும் படப்பிடிப்பை முடிந்துவிட்டு, படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
என்ன விஜய் இதெல்லாம்: கோட் படத்தின் படப்பிடிப்பு கோவளத்தில் உள்ள நட்சத்திர பங்களாவில் நடந்து வருகிறது. கடல் காற்று, உல்லாச கேளிக்கை விடுதி என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடப்பது, ஏதோ பார்ட்டி நடப்பது போல இருப்பதால், தளபதி விஜய் வீட்டுக்கு கூட போகாமல் இரவு பகலாக அங்கேயே இருப்பதாக கூறப்படுகிறது. கோவளத்தில் இருந்து நீலாங்கரையில் இருக்கும் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு 20 நிமிடத்தில் காரில் பயணித்தால் சென்றுவிடலாம்.
ஆனால், விஜய்யோ வீட்டுக்கு செல்ல மனமில்லாமல், கோவளம் படப்பிடிப்பு தளத்திலேயே இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் எதிர்காலத்தில் அரசியல் தலைவராக வேண்டிய விஜய், இப்படி கேளிக்கைக்கு ஆசைப்படலாமா என்றும், என்ன விஜய் இதெல்லாம் என்றும் அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.