திடிரென நடந்த சூர்யா & அமீர் சந்திப்பு. வாடிவாசல் அப்டேட் சீக்கிரமே எதிர்பார்க்கலாம் போல!
சூர்யா விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அமீர் மற்றும் சூர்யாவுக்கு இடையில் பருத்தி வீரன் சமயத்தில் இருந்து ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அமீரை இந்த படத்தில் இருந்து வெளியேற்ற சூர்யா மறைமுக வேலைகள் செய்துகொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அமீர் நடிக்க வேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா விலகலாம் என வதந்திகள் பரவின.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கலைஞர் 100 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது திடீரென சூர்யா மற்றும் அமீர் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்ட போது கட்டித்தழுவி உள்ளனர். அதனால் விரைவில் வாடிவாசல் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.