விஜய் பட தலைப்புக்கு இப்படி ஒரு சிக்கலா. மாற்ற சொல்லி கோரிக்கை!

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு ஆங்கில் வாக்கியங்களில் இருப்பதால் புறநகர் மற்றும் கிராமப்புற ரசிகர்களை இந்த தலைப்பு கவராது என விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம். இது சம்மந்தமாக அவர்கள் படத் தயாரிப்பு நிறுவனத்தை சந்தித்து தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *