200 ரூபாய் இருந்தா போதும்.. ஒரு கோடி வரை சம்பாதிக்கலாம்.. எப்படி..?
சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்கள் (SIP) மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக பெருகி வருகிறது.
சந்தை அபாயங்களைக் குறைப்பதோடு மீண்டும் சந்தை லாபகரமாக இயங்கத் தொடங்கினால் இதற்கு முன்பு ஏற்பட்ட நஷ்டம் ஈடுகட்டப்பட்டுவிடும்இரண்டாவதாக மியூச்சுவல் பண்டுகள் பலதரப்பட்ட பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதன் மூலம் பங்குச்சந்தையில் உள்ள அபாயங்கள் குறையும். சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளானில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இது ஒரு முதலீட்டாளருக்கு முதலீட்டு ஒழுக்கத்தைக் கற்றுத் தருகிறது. அத்துடன் ஒருவரது சேமிப்புப் பழக்கத்தையும் வளர்க்கிறது. தினமும் ரூ.100 என்பது பிற பங்குகளில் முதலீடு செய்வதால் நிகழும் அபாயத்தை தவிர்க்கிறது. அத்துடன் நாம் நினைக்கும் சமயத்தில் சேமிப்பை நிறுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.ஒருவர் தனது முதலீட்டை பல்வேறு போர்ட்போலியோக்களில் முதலீடு செய்யுமாறு எஸ்ஐபியின் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தலாம். நீண்ட நாட்களுக்கு உங்களது முதலீட்டை செய்துவந்தால் அது படிப்படியாக மிகப் பெரிய தொகையாக வளர்ந்து நிற்கும். கடந்த சில ஆண்டுகளில் எஸ்ஐபிகள் மூலம் சராரசியாக ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் வந்துள்ளது.இனி எஸ்ஐபிகளில் தினமும், 200 ரூபாயை 15, 20, 25 ஆண்டுகளுக்கு சேமித்தால் முதிர்வின் போது எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். நீங்கள் 15 காலத்துக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுடைய முதலீட்டு தொகையாக ரூ.10,80,000, இதற்கு சராசரியாக ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் என கணக்கிட்டால்15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு லாபமாக மட்டுமே ரூ.19,47,456 கிடைக்கும். இதன் மூலம் மொத்தமாக ரூ.30,27,456 கிடைக்கும்.இதேபோல் உங்களுக்கு 25 வயது ஆகியிருந்தால் தினமும் ரூ.200ஐ மியூச்சுவல் பண்டுகள் மூலம் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு ரூ.14,40,000 ஆக இருக்கும். 20 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சி தொகை ரூ.59,94,888 ஆக இருக்கும். இதில் வட்டி வருமானம் மட்டும் ரூ.45,54,888 ஆக இருக்கும். உங்களுக்கு 25 வயது ஆகியிருந்தால் தினமும் ரூ.200ஐ மியூச்சுவல் பண்டுகள் மூலம் எஸ்ஐபியில் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்கள் முதலீடு ரூ.18,00,000 ஆக இருக்கும். 25 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சி தொகை ரூ.95,85,811 ஆக இருக்கும்.இதன் மூலம் வட்டி வருமானம் மட்டுமே ரூ.45,54,888 ஆக இருக்கும். ஆக மொத்தம் உங்களது அசல் ரூ.1,13,85,811 ஆக இருக்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால் உங்களது 50 வயதில் நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகியிருப்பீர்கள்.இந்த கணக்கீட்டுக்கு வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் லாபம் என்பதை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டு உள்ளது.