புதிய சோனட் காரை தொடவே திருடர்கள் எல்லாம் நடுங்குவாங்க! இதுல இப்படி ஒரு அம்சம் இருக்குதா?
கியா நிறுவனம் தனது சோனட் காரை அப்டேட் செய்து வெளியிட உள்ள நிலையில் புதிதாக வர உள்ள காரில் உள்ள அம்சம் ஒன்று கார் திருடப்படுவதை தடுக்கிறது. அவர்களிடமிருந்து உங்கள் காரை பாதுகாக்கும் இந்த தொழில்நுட்பத்தை மக்கள் பலர் விரும்புகின்றனர். இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது. இந்த தொழில்நுட்பத்தால் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் தனது சோனட் காரை பேஸலிஃப்ட் செய்து விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் கியாஸ் சோனட் பேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும். நிலையில் இந்த காரில் உள்ள ஒரு முக்கியமான அம்சம் தற்போது வெளியாகி உள்ளது. இது அந்த காரை திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்து தொழில்நுட்பம் இருப்பதால் திருடர்கள் இந்த காரை திருடுவதற்காக நெருங்க கூட முடியாத சூழ்நிலை இருக்கிறது. இப்படி ஒரு தொழில்நுட்பத்தை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதால் பலர் ஆச்சரியப்பட்டுள்ளனர். இதற்காகவே பலர் இந்த காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இந்த காரின் அறிமுகத்திற்கு பிறகு இதன் விற்பனை இந்த தொழில்நுட்பதற்காகவே மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் படி கியா நிறுவனம் கியா கனெக்டிவிட்டி டெக்னாலஜி என்ன தொழில்நுட்பத்தை தனது காரில் புகுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் படி காரின் அனைத்து தகவல்களையும் காரின் உரிமையாளர் அவரது செல்போன் மூலமே பார்த்துக் கொள்ள முடியும். இந்த வசதி மூலம் தான் காரின் திருட்டு தடுக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் படி கியா கனெக்டிவிட்டி ஆப் மூலம் காரின் உரிமையாளர் அவரது காரை சுற்றியுள்ள பகுதியை அவரது செல்போனில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அந்த தகவல் எல்லாம் அவரது செல்போனிற்கு நேரடியாக வந்து விடும். இதனால் காரை யார் திருடினாலும் திருடியவர் குறித்து அனைத்து தகவல்களையும் செல்போனிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.
இதனால் உங்கள் காரை திருடுவதற்கு அல்ல உங்கள் கார அருகில் யார் வந்தாலும் கூட அந்த தகவல் உங்களுக்கு கிடைத்துவிடும். இதை பார்ப்பதற்காக முதலில் நீங்கள் கியா கனெக்டிவிட்டி மொபைல் அப்ளிகேஷனை உங்கள் காருடன் இணைத்து வைத்திருக்க வேண்டும். இப்படி இணைத்து வைத்திருந்தால் உடனடியாக அந்த அப்ளிகேஷனை திறந்து அந்த அப்ளிகேஷனில் கீழ்ப்பக்கம் உள்ள ஸ்டேட்டஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு உங்கள் காரின் ஸ்கெட்ச் குறித்த வரைபடம் ஒன்று அதில் தெரியும். அதற்கு கீழே தற்போது இருக்கும் எரிபொருள் அளவின் படி இன்னும் அந்த கார் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்ற தகவல் உங்களுக்கு தெரியும். அதிலிருந்து கொஞ்சம் கீழே வந்தால் கரண்ட் வியூ என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை நீங்கள் தொடும்போது அடுத்த பக்கத்திற்கு அதை எடுத்துச் செல்லும்.
அதைத் தொட்டவுடன் தற்போது காரை சுற்றியுள்ள பகுதியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா என உறுதி மொழியை உங்களிடம் கேட்கும் நீங்கள் கொடுத்த பின்பு நீங்கள் இதற்கு முன்னர் செட் செய்து வைத்திருந்த பின் நம்பரை கேட்கும். நீங்கள் சரியான பின் நம்பரை கொடுத்த பின்பு உங்களை காரை சுற்றியுள்ள விஷயங்களை காரின் கேமராவில் இருந்து புகைப்படம் எடுத்து உங்கள் செல்போனிற்கு அனுப்பி வைத்து விடும்.
இது ஒரு சூழல் நொடிகளில் உங்கள் செல்போனிற்கு வந்துவிடும். இதனால் உங்கள் கார் திருடப்படும் போது உங்கள் காரை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிய வரும். இதனால் உங்களால் காத்திருட்டை எளிமையாக தடுத்துவிட முடியும். கார் திருடப்பட்டாலும் அந்த கார் தற்போது எங்கு இருக்கிறது என அறிந்து கொள்ள முடியும். திருடர்கள் ஜிபிஎஸ் கருவியை டிஸ்கனெக்ட் செய்தாலும் இந்த தகவல் மூலம் நீங்கள் கார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.