பாத்த வேலை ரொம்ப சின்னதுதான்.. ஆனா எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்ப அழகாயிருச்சு!
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra)வின் தார் எஸ்யூவி (Thar SUV) மாறி இருக்கின்றது. மிக மிக அமோகமான வரவேற்பை இந்த கார் மாடல் நாட்டு மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் இந்த காரை புக் செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் சிலர் அதனைக் கைகளில் பெற மாதக் கணக்கில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அந்த அளவிற்கு நாட்டில் தார் மிகப் பெரிய அளவில் டிமாண்டைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சின்ன மாற்றத்தினால் மிகுந்த அழகுமிக்க காராக மாற்றியிருக்கின்றார். உலக கேம் பிரியர்களின் மனம் கவர்ந்த ஆன்-விளையாட்டுகளில் ஒன்றான கேம் ஆஃப் த்ரான்ஸ் (Game of Thrones) தீமைக் கொண்ட வாகனமாக மாற்றி இருக்கின்றார்.
அதாவது, கம்பெனியால் வழங்கப்பட்ட நிறத்தை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக கேம் ஆஃப் த்ரான் தீம் பெயிண்ட் பூச்சை தார் காருக்கு அதன் உரிமையாளர் செய்திருக்கின்றார். இதனாலேயே அந்த கார் இன்னும் மிகுந்த அழகான வாகனமாக மாறி இருக்கின்றது. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அந்த கார் அழகிய தோற்றத்திற்கு சற்றும் குறைச்சலின்றி காணப்படுகின்றது.
மிக முக்கியமாக போலார் பனி கரடி கர்ஜிப்பதைப் போல இருக்கும் தீம் அந்த காருக்கு மேலும் கம்பீரமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாற்றம் கார் ஆர்வலர்களைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. மேலும், இன்னும் சிலரையும் இதுபோன்று தங்களின் காரை மாடிஃபை செய்ய தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்திராவின் புகழ்மிக்க கார் மாடலான இது (தார் எஸ்யூவி) இந்திய இந்திய சந்தையில் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் ஆரம்ப விலையே ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.
அதிக இட வசதி, அதிக பிரீமியம் அம்சங்கள் என டன் கணக்கில் புதிய அம்சங்களை இந்த தார் காரில் மஹிந்திரா வாரி வழங்கி இருக்கின்றது. இதனால்தான் இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க மற்றும் அட்வென்சர் டிராவல் செய்தல் என இரண்டிற்கும் ஏதுவான கார் மாடலாக தார் மாரி இருக்கின்றது.
4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு ஆஃப்ஷன்களையும் இதற்காக மஹிந்திரா தார் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சின் தேர்வை பொருத்த வரை 2.0 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.
கியர்பாக்ஸ் தேர்வாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. தார் அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராகவும் காட்சியளிக்கின்றது. இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாகும். இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
View this post on Instagram