108 அடி நீளம், 3,600 கிலோ எடை ‘அயோத்தியே மணக்கட்டும்!’ – பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழாஅவர்களுள் மிகவும் பக்தர் ஒருவர் செய்த செயலே பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பூஜைகளில் முக்கியமானது தூபம். தீபம் ஏற்றுவதற்கு முன்பே தூபம் அவசியம். அதிலும் ஸ்ரீராமரை ஆராதிக்கும் வழிபாடுகளில் முக்கியமானது அகர்பத்தி தூபம். மணக்கும் ஊதுபத்தி இல்லாமல் பூஜை நிறைவடைவது இல்லை. அயோத்தியில் 2024 ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீராம ஜன்மபூமியில் நடைபெறும் ஸ்ரீராம பிராணப் பிரதிஷ்டை வைபவத்தில் ஸ்ரீராமருக்காக 3,600 கிலோ பிரமாண்ட ஊதுபத்தியை வடிவமைத்துக் காணிக்கையாக்கியுள்ளார் பக்தர் ஒருவர்.
அயோத்தி ஸ்ரீராமர்
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஊர் எங்கும் நறுமணம் வீசிட, குஜராத்தைச் சேர்ந்த விவசாயி விஹாபாய் பர்வாத் என்பவர் மிக பிரமாண்டமான ஊதுபத்தியை வடிவமைத்துள்ளார். ராமபக்தரான பர்வாத் இதனைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தவுள்ளார். இதுகுறித்துப் பேசிய பர்வாத், ‘ராம பக்தரான நான் கடவுளுக்கு மிகப்பெரிய காணிக்கைச் செலுத்த விரும்பினேன். அதற்காகப் பெரிய அளவிலான ஊதுபத்தியைத் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன். குறிப்பிட்ட நாள்களுக்குள் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள்ளேயே இருந்தது. ஆனால் ஆறுமாத காலம் தனி ஆளாகச் செயல்பட்டு இந்த பிரம்மாண்ட ஊதுபத்தியைத் தயாரித்துவிட்டேன்.