அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு… நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டம்!
பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவைப் பற்றிய பார்வை ஒளிர்கிறது. நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைக் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறது.
இந்த திறப்பு விழாவில் உலகம் முழுவதும் இருந்தும் ஆன்மிகவாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஜனவரி 22ம் தேதி பிற்பகலில் ராம் லல்லா சிலை நிறுவப்பட உள்ளது. கும்பாபிஷேகத்திற்காக வேத விற்பன்னர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் பிரம்மாண்டமாக்கும் வகையில் இந்த கும்பாபிஷேக நிகழ்வுகள் இந்தியா முழுவதும் சாவடி மட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. அத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள சின்னமான டைம்ஸ் சதுக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜனவரி 22, 2024 ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் பிரமாண்ட கும்பாபிஷேக விழாவை இந்தியா முழுவதும் பூத் வாரியாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தில் ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலில் தினமும் 3 முறை ஆரத்தி செய்யப்படும். ராம பக்தர்கள் காலை 6:30, பிற்பகல் 12:00 மற்றும் இரவு 7:30 மணிக்கு ஆரத்தியில் கலந்து கொள்ளலாம். ஆரத்தியில் கலந்துகொள்ள, அறக்கட்டளை மூலம் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அடையாளச் சான்றை சமர்ப்பித்து இந்த பாசை பெறலாம்.
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் srjbtkshetra.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்நுழையலாம். மொபைல் எண்ணை பதிவிட்டு OTP பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். முகப்புப் பக்கத்தில், ‘Aarti’ பகுதியைக் கிளிக் செய்யவேண்டும். இப்போது நீங்கள் கலந்துகொள்ள விரும்பும் ஆரத்தியின் தேதி மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். பக்தர்களின் பெயர், முகவரி, புகைப்படம், மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடலாம். பின்னர் ராமர் கோவிலுக்குச் செல்லும்போது, கவுண்டரில் இருந்து “Aarti Pass” எடுத்துக் கொள்ளலாம். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குள் நுழையும் போது மொபைல் போன்கள், இயர்போன்கள் அல்லது வேறு ஏதேனும் கேஜெட்கள் போன்ற எலக்ட்ரிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்பவர்கள் ஜனவரி 22 ம் தேதி காலை 11:00 மணிக்கு முன்னதாக நிகழ்ச்சி நடைபெறலாம். ராமர் கோவில் திறப்பு விழாவின் போது பாரம்பரிய இந்திய உடைகளை அணியலாம். ஆண்கள் வேட்டி அல்லது குர்தா பைஜாமா அணியலாம். அதே சமயம் பெண்கள் சல்வார் சூட் அல்லது புடவை அணியலாம். எந்த ஆடைக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. 22 ஜனவரி 2024 அன்று ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். காசியின் வேத பண்டிதர்கள் கும்பாபிஷேகத்தை நடத்த இருக்கின்றனர். பிற்பகல் 12:15 முதல் 12:45க்குள் ராமர் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.