Small Onion Chutney : சின்ன வெங்காய சட்னி எப்படி செய்வது? ரொம்பரொம்ப ஈஸி தான்!
தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் -150 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு – 1 முழுதாக
நல்லெண்ணெயய் – 50 gram
கடுகு – 1 ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
காய்ந்த மிளகாய் 15 நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கணும்.
மிக்ஸி ஜாரில் ஊற வச்ச காஞ்ச மிளகாய் ,நறுக்கின சின்ன வெங்காயம், பூண்டு ,புளி ,தக்காளி ,உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சின்ன வெங்காய சட்னி ரெடி.
நன்மைகள்
நுரையீரல் பலம்பெற வேண்டுமானால், அரை டீஸ்பூன் வெங்காயம் சாறு, காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளை சாப்பிட்டு வரவேண்டும்.. இதனால் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.
எவ்வளவு ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிடும்போது நிவாரணம் கிடைக்கும்.
பல்வலி இருந்தால், வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் குணமாகும்.. சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்தால், அந்த பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும்.
பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். நெஞ்சுவலி பிரச்சினை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தம் உறையும் பிரச்சினை சீராவதுடன் இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கும்.