அயோத்தி: ரூ.1.2 கோடியில் தங்கப்பாதுகைகள், 7,000 கிலோ அல்வா, 30 ஆண்டுகளாக மௌனவிரதம் இருக்கும் பெண்!

யோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. இக்கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து கால்நடையாக அயோத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வெதுர்பகா என்ற கிராமத்தைச் சேர்ந்த சர்லா ஸ்ரீவாஸ்தவா சாஸ்திரி என்பவர் ராமருக்கு அணிவிப்பதற்காக தங்கப் பாதுகைகளுடன் கால் நடையாக அயோத்திக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

“கடந்த அக்டோபர் 28-ம் தேதி எனது கிராமத்தில் இருந்து பாதயாத்திரையைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் பாதுகை வெள்ளியில்தான் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நடைப்பயணத்தின் போதுதான் அதில் தங்கத் தகடு பொருத்த முடிவு செய்தோம்.

சர்லா ஸ்ரீவாஸ்தவா சாஸ்திரி

வெள்ளிப் பாதுகைகளை ஐதராபாத் அனுப்பி தங்கத் தகடுகளைப் பொருத்தினோம். தங்கம் இல்லாமல் ஒவ்வொரு பாதுகையும் 8 கிலோ இருந்தது. தங்க தகடுகள் பொருத்தப்பட்ட பிறகு ஒவ்வொன்றும் 12.5 கிலோ இருக்கிறது. அடுத்த வாரம் அயோத்தியை சென்றடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனை உத்தரப்பிரதேச முதல்வரிடம் கொடுக்க இருக்கிறேன். பாதுகைகளைக் கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு வைப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் உறுதியளித்துள்ளார்.

20 பேருடன் இந்த யாத்திரையைத் தொடங்கினோம். கடும் குளிர் காரணமாக இப்போது வெறும் 6 பேர் மட்டுமே பயணத்தில் இருக்கிறோம். பாதுகைகளைத் தலையில் சுமந்தபடி தினமும் 38 கி.மீ தூரம் நடக்கிறோம். இந்தப் பாதுகைகள் இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் எடுத்துச்செல்லப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

ராமருக்கு 7,000 கிலோ அல்வா

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர், அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரசாதமாக 7,000 கிலோ அல்வா தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பாக விஷ்னு மனோகர் கூறுகையில், “7,000 கிலோ அல்வா தயாரிக்க 1,400 கிலோ எடையுள்ள பாத்திரம் தயார் நிலையில் இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *