மகாஸ்கந்த ஹோமம்: நம் குலத்தைக் காக்கும் ஒப்பற்ற வழிபாடு; தோரணமலை தைப்பூச விழாவில் சங்கல்பியுங்கள்!
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வேல் வழிபாடு தமிழகத்தில் தொன்மையானது என்பர். ‘வேலவா’ என்ற இம்மந்திரத்தால் நன்மையடைந்தோர் பலர். முருகனின் திருநாமத்தில் உயந்தது வேலவா என்கிறார்கள் ஆன்றோர்கள். வேலும் முருகனும் வேறுவேறு இல்லை. அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம் எனக் கூறப்படுகிறது. உலகில் முதன்முதலில் நீர் தோன்றியது தைப்பூச நாளிலே என்பார்கள். எனவே, சிவாலயங்கள், முருகப்பெருமான் திருக்கோயில்களில் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. வேலை ஒருவர் வணங்கினால் அவர்கள் ஏழேழ் தலைமுறையும் நன்மை அடையும் என்கிறார் பாம்பன் சுவாமிகள்.
தைப்பூச தரிசனம்
தை மாதப் பூசமும், வியாழனும், பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில், சிவபெருமான் ரிஷிகளுக்காக தில்லையில் ஆனந்த திருநடனம் ஆடினார். எனவே சிவனடியார்களுக்கும் தைப்பூச தினம் மிகவும் உத்தம நாள் என்பார்கள். வணங்கியவரின் குலத்தைக் காக்கும் தைப்பூச நன்னாளிலே உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்துகிறது.
இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் வேண்டிய அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமையும் என்கிறார்கள். தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, கடன் நிவர்த்தி உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்வு, நீங்காத செல்வம், நிறைவான புகழ் யாவும் கிட்டும். எதிரிகள் தொல்லை, சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள். சுருங்கச் சொல்லின் உங்களின் வேண்டுதல்கள் யாவும் தோரணமலையான் அருளால் நிச்சயம் நடக்கும். அதை இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.