டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் சிஎஸ்கே சிங்கம்.. 2 வீரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தடுமாறினர். இதனால் அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
எனினும் இந்திய மண்ணில் நடைபெறுவதால் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு தேர்வு குழு வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளனர். எனினும் அதில் ஒரு டிவிஸ்ட் காத்திருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணி தான் அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஸ்ரேயாஸ், கில் ,ஜெய்ஸ்வால் போன்ற மூன்று முக்கிய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த மூன்று இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொருத்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.
இதே போன்று தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ருதுராஜ் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முழு உடல் தகுதியை எட்டி விடுவார் என தெரிகிறது. இதனால் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. கில், ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அந்த இடத்திற்கு ருதுராஜ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை ருதுராஜ் நம்பர் ஒன் அல்லது மூன்றாவது வீரராக களம்பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேலை ஸ்ரேயாஸ் சரியாக விளையாடவில்லை என்றால் ருதுராஜ்க்கு மூன்றாவது இடத்தில் களமிறங்கி விட்டு ஸ்ரேயாஸ் இடத்தில் கில்லை களம் இறக்கவும் தேர்வுக்குழு ஆலோசக்தி வருகிறது. இனி வரும் நாட்களில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.