உயிர்த் துணையைத் தேடுபவரா நீங்கள்?
உயிர் என்று சொல்கிறபோது முழுமையானதும் எல்லையற்றதும் ஆன ஒன்று பற்றி நாம் குறிப்பிடுகிறோம். எல்லைக்கு உட்பட்டது எதுவோ அதற்குத்தான் துணை வேண்டும். எல்லையில்லாத ஒன்றுக்குத் துணை தேவையில்லை.எதார்த்தமாக இருப்பதன் சிறப்பம்சம் என்ன என்று சொன்னால் நாளை குறுகிய எல்லைகள் உங்களை எதிர்கொள்ளும்போது அவற்றைக் கையாளும் முதிர்ச்சியை நீங்கள் பெறுவீர்கள்.நமக்கு ஏன் ஒரு துணை தேவை?மனிதர்களுக்கு எதற்காக துணை தேவை? அவற்றுக்கு உடல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.
இதனைப் பாலியல் என்கிறோம். அதுவும் மிக அழகான அம்சம்தான். மனம் சார்ந்த காரணங்களை முன்வைத்து ஒரு துணையைத் தேடுகிறோம். இதனை உடனிருத்தல் என்கிறோம்.
அதுவும் அழகானதுதான். உணர்ச்சிகளை முன்வைத்த தேடலை அன்பு காதல் என்கிறோம். காலங்காலமாய் மிக அழகான அனுபவமாக இது வர்ணிக்கப்படுகிறது. இவை எல்லாமே வாழ்வை அழகாக்கக் கூடியவைதான்.
ஆனால் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருந்தால் இத்தகைய ஏற்பாடுகளால் ஒரு பதட்டம் உருவாவதை நீங்கள் மறுக்க முடியாது.ஓர் உறவுமுறை செயல்படுவதில் இருக்கக்கூடிய குறுகிய எல்லைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வது நல்லது. அப்போதுதான் அவற்றை இயற்கையாகக் கையாள உங்களுக்கு வழி தெரியும்.