வேதனையில் இருக்கிறார் ரோஹித் சர்மா அதனால்தான் இதை செய்தார்.. ஸ்ரீகாந்த் ஓபன் டாக்
ரோஹித் சர்மா வேதனையில் இருக்கிறார் என்றும், அதனால் தான் அவர் மீண்டும் இந்திய டி20 அணியில் இணைந்து இருக்கிறார் எனவும் பேசி இருக்கிறார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
ரோஹித் சர்மா 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய பின் டி20 அணியில் இருந்து விலகி இருந்தார். அவர் இனி டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் கூட கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப 2௦24 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாண்டியா அல்லது சூர்யகுமாரை கேப்டனாக கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ரோஹித் சர்மா டி20 அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரே 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட உள்ளதாக பிசிசிஐ-யில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல, விராட் கோலியும் ஓராண்டுக்கு பின் அணிக்கு திரும்பியதோடு இப்போது ஏன் ரோஹித் சர்மா தன் மனதை மாற்றிக் கொண்டு டி20 அணிக்கு திரும்பி இருக்கிறார்
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசி இருக்கிறார். ரோஹித் சர்மா 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இந்திய அணி தோல்வி அடைந்ததால் பெரும் வேதனையில் இருக்கிறார். எனவே, தான் ஓய்வு பெறும் முன் உலகக்கோப்பை ஒன்றை வெல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார் என்றார். அதே போல, கோலியும் உலகக்கோப்பை வெல்ல நினைக்கிறார் எனக் கூறியதோடு, அவர்களின்.
பார்ம் குறித்தும் பேசினார் ஸ்ரீகாந்த்,
“விராட் கோலியை தவிர்க்க முடியாது. அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் சர்மா, 2023 உலகக்கோப்பையில் நன்றாக ரன் குவித்ததால் நம்பிக்கையுடன் இருக்கலாம். ரோஹித் சர்மா தான் டி20 அணியில் ஆட விரும்புவதாக கூறினால், அவரை வேண்டாம் என உங்களால் மறுக்க முடியாது. அவர் 2023 உலகக்கோப்பையில் தோல்வி அடைந்த வேதனையில் இருக்கிறார். அவர் தன் கையில் ஒரு உலகக்கோப்பை இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தார். அதே போல இப்போதும் ஒரு உலகக்கோப்பை வெற்றியை பெற்று கிரிக்கெட்டில் இருந்து வெளியேற வேண்டும் என நினைக்கிறார்” என்றார் ஸ்ரீகாந்த்.