கரும்புள்ளிகளைக் குறைக்கும் குங்குமப்பூ நைட் கிரீம்: எப்படி செய்றதுனு பாருங்க

சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் சில வீட்டு வைத்தியங்களைக் கண்டறியும் எங்கள் தேடலில், ஆரோக்கியமான சருமத்திற்கு DIY நைட் க்ரீம் தயாரிக்க குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் வீடியோவை நாங்கள் பார்த்தோம்.

மான்ஸ் கிச்சனில் இருந்து கிடைக்கும் தீர்வு ‘களங்கமில்லாத சருமத்தை’ உறுதியளிக்கிறது.

ஆனால் நீங்கள்  தீர்வுக்குள் செல்வதற்கு முன், தோல் பராமரிப்பு என்பது தூக்கம், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்க வழக்கங்களின் ஒரு முழுமையான நடைமுறை என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

குங்குமப்பூ நைட் க்ரீம் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

சில குங்குமப்பூ இழைகள்

சிறிய கண்ணாடி பாட்டில்

2 ஸ்பூன் புதிய அலோ வேரா ஜெல்

2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்

1 ஸ்பூன் பாதாம் எண்ணெய்

* ஒரு டிஷ்யூ பேப்பரில், சில குங்குமப்பூ இழைகளை வைத்து மடிக்கவும். ஒரு தவாவில் 1 நிமிடம் சூடாக்கவும்.

* இந்த குங்குமப்பூ இழைகளை ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போடவும்.

*2 ஸ்பூன் புதிய கற்றாழை ஜெல், 2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய், சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தின் படி, இந்த கிரீம்

*தோல் பளிச்சிட உதவுகிறது.

* கரும்புள்ளிகளை நீக்குகிறது.

* சுருக்கங்களை குறைக்கிறது.

இந்த கிரீமை 2 மாதங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *