‘லலித் மோடி எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விடுவதாக மிரட்டினார்’: முன்னாள் இந்திய வீரர் பரபர குற்றச்சாட்டு

IPL Cricket: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் பிரவீன் குமார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2007ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவர் 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமாடிய அவர் 2010 வரை அந்த அணிக்காக விளையாடினார். அதன்பிறகு,  2011 முதல் 2013 வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடினார். 2014 ஐபிஎல் ஏலத்தில் அதிக அடிப்படை விலையின் காரணமாக அவர் விற்கப்படவில்லை. இதன்பிறகு, காயமடைந்த ஜாகீர் கானுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அவரை ஒப்பந்தம் செய்தது.

ஐ.பி.எல் 2015 ஏலத்தில் 2.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2016 முதல் 2017 வரை குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவே அவர் ஐபிஎல்லில் கடைசியாக இடம்பெற்ற அணியாகும். தற்போது 37வயதாகும் பிரவீன் குமார் 2018ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், ஐ.பி.எல் தொடக்க சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் தேர்வாக இருக்கவில்லை என்றும், அந்த அணியில் சேரத் தயக்கம் காட்டியதற்கு லலித் மோடி கடுமையான எதிர்வினை ஆற்றினார் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *