Today Rasipalan (23.12.2023): இந்த நாள் சூப்பரா? சுமாரா?.. இதோ 12 ராசிகளுக்கான பலன்கள்!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
தேவையில்லாத விவாதங்களில் தலையிட வேண்டாம். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. போட்டி நிறைந்த நாள்.
ரிஷபம்
குழந்தைகளின் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்
சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். கடினமான விஷயத்தையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
கடகம்
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். நண்பர்களின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிஜமாகும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
கன்னி
துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சுபச்செய்திகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
விருச்சிகம்
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.
தனுசு
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் சுய ரூபத்தை அறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
மகரம்
நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். மறைமுகமான சில எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும்.
கும்பம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். மனை விருத்திக்கான சூழல் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியதை சாதிப்பீர்கள். திட்டமிட்ட கடன் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
நண்பர்களுக்கிடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.