கிராண்ட் மாஸ்டர் வைஷாலி; கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது: ஜனாதிபதி கவுரவம் – வீடியோ
Mohammed Shami | Arjuna Award | Vaishali R: விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன. அதன்படி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், அர்ஜுனா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கி கவுரவித்தார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறும் 26 விளையாட்டு வீரர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவார். ஷமி அண்மையில் இந்திய மண்ணில் நடைப்பெற்ற உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அத்துடன் பல்வேறு சாதனைகளை உலக கிரிக்கெட் அரங்கில் படைத்துள்ளார். இந்த ஆண்டு மூன்று வடிவங்களிலும் ஐ.சி.சி-யின் நம்பர் 1 அணியாக இந்தியா இருந்து வருவதில் ஷமி முக்கிய பங்கு வகித்தும் வருகிறார்.