எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க… டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு அதிகரிக்க தொடங்குகிறது. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் எலும்புகள் வளர வளர, எலும்பு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன், வேறு சில ஊட்டசத்துக்களும் எலும்புகளுக்கு அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக எலும்புகளும் பலவீனமடையத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக பராமரிக்க எந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கான உணவுகள்
1. எலும்புகளை வலுப்படுத்த, வெல்லம் சாப்பிட வேண்டும். வெல்லத்தில் இருந்து உடலுக்கு நல்ல அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கிறது. மேலும், வெல்லம் சர்க்கரைக்கான ஆரோக்கியமான (Health Tips) மாற்றாகவும் கருதப்படுகிறது.
2. சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் காணப்படுகின்றன. இதற்கு ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, ஸ்ட்ராபெரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
3. தினமும் முட்டை சாப்பிடுவதால் எலும்புகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் உணவில் முட்டையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. முட்டை மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கும்.