ஸ்கிலரோசிஸ் எனும் இயக்க நரம்பு நோய் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர்
நரம்புகள் மின்கணத்தாக்கங்களை மூளை, முண்ணான் உடலங்கங்களுக்கு கடத்தும் கடத்திகள் போன்றவை ஆகும்.இயக்க நரம்புகள் – இவை மூளை, முண்ணானிலிருந்து கணத்தாக்கங்களை தசைகளுக்கு கடத்தி அவற்றை சுருக்கமடையச் செய்யும் நரம்புகள் ஆகும்.
புலன் நரம்புகள் – இவை தொடுகை, வெப்பம், ஒலி, மணநுகர்ச்சி, சுவை போன்றவற்றை உடலிலிருந்து மூளைக்கு கடத்தும் நரம்புகள் ஆகும்.
இயக்கநரம்பு நோய்
இங்கு இயக்க நரம்புகள் பாதிக்கப்பட்டு படிப்படியாக செயலிழக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவ் இயக்க நரம்புகளுக்குரிய தசைகள் படிப்படியாக பலமிழக்கின்றன. இவற்றில் பல உபபிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைகளில் ஆரம்பிக்கின்றன. நோய் தீவிரமடைந்து வரும்போது பொதுவான நோய்க்குணங்குறிகள் காணப்படும்.
பிரதான வகைகள்
(Amyotrophic lateral sclerosis) இதுவே முக்கிய/ பொதுவான வகை ஆகும். 10 இல் 7 பேரில் காணப்படும். நோய்க்குணங்குறிகள் கைகளிலும் பாதங்களிலும் ஆரம்பிக்கின்றன. தசைகள் இறுக்கமடைவதுடன் பலமிழந்து காணப்படும்.(Progressive bulbar palsy) 10 இல் 2 பேரில் காணப்படும் இயக்கநரம்பு நோய். பேச்சு, வாயசைவுகள், விழுங்குதல் போன்றவற்றுக்குரிய தசைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
(Progressive muscular atrophy) அரிதான வகை ஆகும். கைகளிலும் பாதங்களிலும் காணப்படும் சிறு தசைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.(Primary lateral sclerosis) மிக அரிதான வகை ஆகும். பிரதானமாக கால்தசைகளைப் பாதிக்கும். சிலரில் கைகள், பேச்சு போன்றவற்றையும் பாதிக்கும்.இயக்கநரம்பு நோய் ஒரு அரிதான வகை நோயாகும். இது எவரிலும் உருவாகலாம். ஆயின் இது 40வயதிலும் குறைவானவர்களில் அரிதாகும். பொதுவாக 50 – 80 வயதுகளுக்கிடையில் உருவாகும். இது ஆண்களில் பெண்களை விடப் பொதுவானது. 10 இல் 9 பேரில் காணப்படும். இயக்க நரம்புநோய் பாரம்பரியமாக உருவாகப்படாததனால் அடுத்த சந்ததிக்கு பொதுவாக கடத்தப்படுவதில்லை. ஆயின் 10 இல் ஒருவரில் இது பாரம்பரிய நோயாக காணப்பட்டு அடுத்த சந்ததிக்கு கடத்தப்படக்கூடியது.
காரணங்களும், அறிகுறிகளும்
அதற்குரிய காரணிகள் அறியப்படவில்லை. சில இயக்கநரம்புகளில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள்/ கட்டமைப்புக்கள் பாதிக்கப்படுகின்றமையால் நோய் ஏற்படுகிறது என கருதப்படுகிறது. இவ்நரம்புகள் பாதிக்கப்படுவதற்கான காரணம் தெளிவற்றுள்ளது. அத்துடன் புலன்நரம்புகள் பாதிக்கப்படாமைக்கான காரணமும் தெளிவற்றுள்ளது. இந்நோய் உருவாகக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளவர்களில் சில சூழற்காரணிகள் இயக்கநரம்பு நோய் உருவாவதை தூண்டுகிறது. இதற்குரிய காரணிகளை மேலும் அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.