இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 9, 2024 செவ்வாய்க்கிழமை
சென்னை:
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 09.01.2024,சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.14 வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று இரவு 08.17 வரை கேட்டை. பின்னர் மூலம், பரணி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம்
வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அடைவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை நீக்குவீர்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களை முக மலர்ச்சியோடு வரவேற்பீர்கள்.
மிதுனம்
சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் தூக்கத்தை தொலைப்பீர்கள். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளவில்லை என்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். காதலியின் பணத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறுவீர்கள்.