உலகம் அடுத்து என்னவாகும்? விரிவடையும் பேரண்டம்.. நாம் தனித்து விடப்படுவோமா?

நமது பேரண்டம் அணுக்களால் ஆனது என்று அறிவியல் பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால், இன்றைய அறிவியல் சிந்தனையில் இது மிகவும் பழையாதாக, போதாத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது
நமது கண்ணுக்கு புலப்படக் கூடிய பருப்பொருள் (அதாவது அணுக்களால் உருவான மரம், மனிதன், பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி) எண்ணிக்கை வெறும் 5 சத விகிதமாக பார்க்கப்படுகுகிறது. 25% விழுக்காடு பகுதி நாம் கண்ணுக்கு புலப்படாத ஆனால் ஈர்ப்பு விசை மூலம் மட்டுமே அறிந்துகொள்ள கூடிய இருள்பொருள் ஆக்கிரமித்துள்ளது (Dark Matter) .
மீதமுள்ள 70 விழுக்காடு பகுதியை இருளாற்றல் என்ற விசை ஆக்கிரமித்து உள்ளது. அதாவது, இந்த பேரண்டத்தில் உள்ள 95% விழுக்காடு பகுதிகள் பற்றிய அறிவோ ! புரிதலோ! நம்மிடம் இல்லை.