அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகள்… சீரியல் நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ; ரசிகர்கள் வாழ்த்து
சன் டிவி சீரியல் நடிகை சாண்ட்ரா தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் புதிய வீடு வாங்கி உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்பு எல்லாம் சினிமா நடிகர்கள்தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்கள், திரையில் பார்த்த சினிமா நடிகர்களை ரசிகர்கள் நேரில் பார்க்கும்போது பரவச நிலையில் இருப்பார்கள், அந்தக் காலம் மலை ஏறிவிட்டது என்றே சொல்லலாம்.
சமூக ஊடகங்களின் காலத்தில் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் பிரபலமாகலாம், இப்போது எல்லாம், சினிமா நடிகர்கள், நடிகைகளைவிட சீரியல் நடிகர்கள், நடிகையர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். ரசிகர்களிடையே மேலும் நெருக்கமாக இருக்க, தங்கள் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், ஈர்க்கப்படும் ரசிகர்கள் சின்னத்திரை நடிகைகளுக்கு லட்சக் கணக்கில் ஃபோலோயர்களாக பின்தொடர்கின்றனர்.
சமீப காலமாக சீரியல் நடிகர்கள், நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார வாங்குவது, வீடு வாங்குவது என்று புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், சன் டிவியின் பிரியமான தோழி சீரியல் நடிகை சாண்ட்ரா பாபு, மறைந்த தனது அப்பாவின் கனவை நிறைவேற்றும் வகையில் புதியதாக ஒரு வீடு வாங்கி தந்தையின் பெயர் வைத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வரும் ‘பிரியமான தோழி’ சீரியல் ரசிகர்கள் இடையே பிரபலமான சீரியல். இந்த சீரியலில் சாண்ட்ரா பாபு, விக்கி ரோஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் சாண்ட்ரா பாபு இதற்கு முன்னர், மலையாள டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ‘கருத்தமுத்து’ என்ற சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலைத் தொடர்ந்து ‘தூவல்ஸ்பர்ஷம்’ என்ற சீரியலில் நடித்தார்.
இதைத் தொடர்ந்து, சன் டிவியில் 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான சாக்லேட் சீரியல் மூலம், சாண்ட்ரா பாபு தமிழ் சீரியலில் நுழைந்தார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு முதல் ‘பிரியமான தோழி’ சீரியலில் நடித்து வருகிறார். அதே நேரத்ஹ்டில், மலையாளத்தில் ‘நின்னிஷ்டம் என்ஷ்டம்’ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சாண்ட்ரா பாபு, தனது குடும்பத்துக்கான ஆடம்பரமான கனவு இல்லம் ஒன்றை வாங்கியுள்ளார். ஒரு பெரிய வீடு வாங்குவது மறைந்த அவருடைய தந்தையின் கனவாக இருந்துள்ளது. சாண்ட்ரா பாபு, புதிய வீடு வாங்கி தனது தந்தையின் கனவை நிறைவேற்றியதோடு, அந்த வீட்டுக்கு பாபு வில்லா என்று தனது அப்பாவின் பெயரை வைத்துள்ளதாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.