Sani: சனிபகவானிடம் சிக்கி சிதயப் போகும் ராசிகள்
சனிபகவான் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 20ஆம் தேதி அன்று இடமாற்றம் செய்தார். இந்த விழா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோயில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கும் சனி பகவான் தாக்கம் ஏற்படும்.
சனி பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி
சனிபகவான் உங்களுக்கு சில சங்கடங்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சற்று தாமதமாகும். எந்த காரியமாக இருந்தாலும் ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தடைபட்ட காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும். பண வரவிற்கு இந்த குறையும் இருக்காது. இறை வழிபாடு மிகவும் முக்கியமாகும்.
விருச்சிக ராசி
சனி பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமண சிக்கல்கள் ஏற்படாத வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறை வழிபாட்டில் இறங்குவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கால பைரவரின் வழிபாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும்.
கும்ப ராசி
சனி பகவான் உங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுப்பார் கடன் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் சிவ வழிபாடு மிகவும் அவசியமாகும். இது உங்களுக்கு ஜென்ம சனி காலமாகும். எனவே இறை வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கோபம் சங்கடங்கள் ஏற்பட்டால் அமைதியாக செல்ல வேண்டும்.