50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடும் ரியோவின் ஜோ திரைப்படம்; வெற்றிகொண்டாட்டத்தில் படக்குழு.!
விஷன் சினிமா ஹவுஸ், சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில், சித்து குமார் இசையில், கடந்த 24 நவம்பர் 2023 அன்று வெளியான திரைப்படம் ஜோ.
காதல் – ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட ஜோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படம் 50 நாட்களை கடந்த வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது.
இதனை கொண்டாடும் விதமாக படக்குழு 50வது நாள் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஜோ படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா, சார்லி, ப்ரவீனா உட்பட பலரும் நடித்திருந்தனர்.