தாத்தா ரஜினியே அப்படியே ஜெராக்ஸ் எடுத்த பேரன் யாத்ரா.
இதையொட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா உடன் கலந்து கொண்டார். பெரும்பாலும் அவர் பங்கேற்கும் சினிமா துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் தனது மகன்களுடன் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தனுஷ் அருகே அமர்ந்திருந்த மகன் யாத்ரா இளம் வயதில் ரஜினி எப்படி இருப்பாரோ அதேபோன்ற தோற்றத்தை நினைவுபடுத்தினார்.
தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இடையே 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2006ஆம் ஆண்டு யாத்ராவும், 2010-இல் லிங்காவும் பிறந்தனர். தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து இருக்கும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு மகன்களை அழைத்துச் செல்வதை தனுஷ் வழக்கமாக வைத்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் யாத்ரா 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ரஜினி போன்று இருப்பதால் யாத்ராவை ரஜினி ரசிகர்களும் தனுஷ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.