”ஒரே வாரத்தில் லவ் சொன்னேன்..” – விஜய் சேதுபதி காதல் வாழ்க்கை
நடிகர் விஜய் சேதுபதியின் இன்டர்வியூ ஒன்று இந்தி வட்டாரங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவர் நடித்துள்ள மெரி கிறிஸ்மஸ் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சுவாரசியமான பதிலை விஜய் சேதுபதி அளித்துள்ளார்.
42 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா முன்னணி கேரக்டரில் நடித்த ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்தி வட்டாரத்தில் பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.
ஜவான் படத்திற்கு முன்னதாக அவர் கேத்ரினா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தி மொழியில் படக்குழுவினர் ஒரு நேர்காணலை அளித்துள்ளார்கள்.
அதில் விஜய் சேதுபதியிடம், ‘நீங்கள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் மெரி கிறிஸ்மஸ் போன்ற மாறுபட்ட படங்களில் நடிப்பதற்கு எப்படி தைரியமாக முடிவு எடுத்தீர்கள்?’ என்று நேர்காணல் செய்பவர் கேட்டிருந்தார்.