கோடியில் புரண்ட ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் இன்று மரணத்திற்காக காத்திருக்கிறார்..? என்ன நடந்தது..?

கண் இமைக்கும் நேரத்தில் ஒருவரது அதிர்ஷ்டம் மாறும் என்பது விமானப் போக்குவரத்து உலகில் நரேஷ் கோயலின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் சாரத்தை தெளிவாகப் படம்பிடித்துக் கூறுகின்றது.
ஒரு காலத்தில் ஜெட் ஏர்வேஸின் தொலைநோக்கு நிறுவனராக மக்களால் கொண்டாடப்பட்ட கோயலின் பயணம் எளிமையான தொடக்கத்திலிருந்து வெற்றியின் உச்சங்களுக்கு சென்றது. பஞ்சாபின் சங்கூரில் பிறந்த கோயலின் தொடக்கக் காலம் பல நிதிப் பிரச்னைகளை சந்தித்தது. ஒரு டிராவல் ஏஜென்சியில் கேஷியராக 18 வயதில் வேலையைத் தொடங்கினார் நரேஷ் கோயல். டிராவல் ஏஜென்சியின் நுணுக்கங்களை அவர் நன்கு கற்றறிந்தார். 1974 ஆம் ஆண்டில் தனது தாயாரிடம் ரூ.52,000 கடனாகப் பெற்று உழைத்து 1993 ஆம் ஆண்டில் ஜெட் ஏர்வேஸை நரேஷ் கோயல் தொடங்கினார். சீக்கிரமே விமானப் போக்குவரத்துத் துறையில் ஜெட் ஏர்வேஸ் தனக்கென்று தனியிடத்தைப் பெற்றது. மாடர்ன் விமானங்கள் நிறைய வாங்கி இயக்கினார், இதன்மூலம் போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம் பெற்றார். கோயலின் தலைமையின் கீழ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்தது. இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கடும் போட்டியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தந்தது. 1990கள் மற்றும் 2000களில் ஜெட் ஏர்வேஸ் உச்சகட்ட உயரத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை சொந்தமாக வைத்திருந்தது. விமானப் பயணம் என்றாலே ஜெட் ஏர்வேஸின் சொகுசான பயணம் தான் வாடிக்கையாளர்களுக்கு ஞாபகம் வந்தது. கோயலின் வெற்றி வணிக உலகில் மட்டும் நின்று விடவில்லை; ஃபோர்ப்ஸ் பட்டியலில் 16 வது இடத்தைப் பெற்று, நாட்டின் பெரும் பணக்காரர்களில் அவரது பெயர் அடிக்கடி இடம்பெற்றது. ஜெட் ஏர்வேஸின் கதை, கனவுகளை நிஜமாக மாற்றும் கோயலின் திறமைக்கு சான்றாக பார்க்கப்பட்டது. இருப்பினும், நீங்கள் எவ்வளவு உயரத்தில் பறக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக நீங்கள் விழுகிறீர்கள் என்ற பழமொழிக்கேற்ப கோயலின் தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், ஜெட் ஏர்வேஸ் நிதி முறைகேடுகளுடன் போராடி, திருப்பி செலுத்த முடியாத கடன்களில் மூழ்கியது. ஒரு காலத்தில் வலிமைமிக்க விமான நிறுவனம் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டது இறுதியில் 2019 இல் அதன் விமானங்களை தரையிறக்கியது. இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறித்தது. ஜெட் ஏர்வேஸின் சரிவு அத்தோடு நிற்கவில்லை. அதே ஆண்டு செப்டம்பரில், மற்றொரு விமான நிறுவனமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சியுடன் தொடர்புடைய ₹538 கோடி மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க இயக்குநரகம் கோயலை கைது செய்தது. கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற காலகட்டத்துக்குப் பின் தொடர்ந்த சட்டப் போராட்டம் முற்றிலும் மாறுபட்டது. மும்பையின் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்ட கோயல், எந்த நம்பிக்கையும் இல்லை, சிறையிலேயே என் உயிர் பிரிந்தால் போதும் என நீதிமன்றத்தில் சமீபத்திய விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.