வதந்தியை நம்ப வேண்டாம்.. ZEE- SONY இணைப்பு வெற்றியடையும்.. Zee பங்குகளின் நிலமை என்ன..?
இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் செவ்வாயன்று Zee Entertainment மற்றும் Sony இந்தியா இடையேயான பல பில்லியன் டாலர் இணைப்பு ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன்னர் நிறுத்தப்படும் என்ற செய்தி, அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் பங்கு மதிப்பை 12 சதவீதம் வரையில் சரிய வழிவகுத்துள்ளது.இந்தத் தகவல் அடிப்படையற்றது மற்றும் தவறானது என்று ஜீ என்டர்டெயின்மென்ட் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது .
சோனி நிறுவனம் ஜீ என்டர்டெயின்மென்ட் உடன் 10 பில்லியன் டாலர் இணைப்பைத் திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும், சோனி நிறுவனம் ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன் ஒப்பந்த முறிவுக்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் ப்ளூம்பெர்க் திங்களன்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட்-யிடம் விளக்கம் கேட்ட நிலையில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவல் அடிப்படையற்றது மற்றும் தவறானது என்று விளக்கம் கொடுத்தது.சோனி நிறுவனம் – ஜீ என்டர்டெயின்மென்ட் மத்தியிலான இணைப்பில் உறுதியாக இருப்பதாகவும், தொடர்ந்து இதுகுறித்த பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், வெற்றிகரமான இணைப்புச் சாத்தியமாகும் எனவும் தனது அறிக்கையில் ஜீ என்டர்டெயின்மென்ட் விளக்கம் கொடுத்தது.இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள் 7.64 சதவீத சரிவில் 256.25 ரூபாயாக உள்ளது. காலையில் வர்த்தகத்தில் 242.30 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.அம்பானிக்கு எதிராகப் போட்ட திட்டம் தோல்வி.. ZEE-SONY கூட்டணி முறிவு..?! 2021ல் ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி இந்தியா மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி அனைத்து ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதல்களைப் பெற்றுள்ள வேளையிலும், இணைப்பில் பல பிரச்சனைகள் உள்ளது.ZEE-SONY இணைக்கப்பட்ட நிறுவனத்திற்குத் தங்கள் தரப்பில் உள்ள பிரதிநிதியைத் தான் நியமிக்க வேண்டும் என இரு தரப்பும் மல்லுக்கட்டி வருகிறது. இதன் அடிப்படையில் சோனி என்பி சிங்-ஐயும், ஜீ என்டர்டெயின்மென்ட் தரப்பில் புனித் கோங்கா முன்வைக்கப்படுகிறது. இது முக்கியமான பிரச்சனையாக இந்த இணைப்பில் இருப்பதாக ப்ளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டு இருந்தது.