mAadhaar ஆப்பில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி.. ரொம்ப ஈசி..!

UIDAI அமைப்பால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனான எம்ஆதார் (mAadhaar) உங்கள் பாக்கெட்டில் உள்ள ஆதார் கார்டைவிட சிறந்ததாகும்.
மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இந்த எம்ஆதார் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம்.பதிவு செய்யப்பட்ட மொபைலை ஆதாருடன் இணைத்திருந்தால் மட்டுமே எம்ஆதார் ஆப்பில் ஆதார் புரொபைலை உருவாக்க முடியும். எம்ஆதார் புரொபைலை செல்லத்தக்க ஐடி புரூப் ஆகவும், இகேஒய்சி அல்லது க்யூஆர் கோடு சர்வீஸ் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை அறிந்து கொள்ளவும் உதவும். எம்ஆதார் ஆப் ஆதார் கார்டு எண் வைத்திருப்பவர்களின் சுயவிவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம் விவரங்களை அறிய உதவும். சில எளிய முறைகளின் மூலம் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை எம்ஆதார் ஆப்பில் சேர்க்கலாம்.இந்த ஆப்பில் அதிகபட்சம் மூன்று உறுப்பினர்களை அவர்களது ஆதாரில் சேர்க்கப்பட்ட அதே மொபைல் போன் விவரங்களுடன் இணைக்கலாம்.ஆதாருடன் இணைக்கப்பட்ட அதே மொபைல் எண்ணுடன் தான் ஆப்பில் அவர்களது விவரங்களை சேர்க்க முடியும்.இதற்கான வழிமுறை– உங்களது ஸ்மார்போனில் உள்ள எம்ஆதார் ஆப்பை திறந்து கொள்ளுங்கள்.- அதில் “Add Profile” என்பதை கிளிக் செய்யுங்கள்.- உங்களது குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை எண்ணை அதில் உள்ளீடு செய்யுங்கள்.- விவரங்களை சரிபார்த்தபின்னர் விதிகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.- உங்களது குடும்ப உறுப்பினருக்கு ஒரு ஓடிபி அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்து சேரும். அதைக் கேட்டுப் பெறுங்கள்.- அந்த ஓடிபியை ஆப்பில் டைப் செய்யுங்கள்.-விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் குடும்ப உறுப்பினரின் விவரங்கள் உங்களது ஆப்பில் சேர்க்கப்பட்டுவிடும்.குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உங்களது எம்ஆதார் ஆப்பில் வெற்றிகரமாக சேர்த்துவிட்டால் நீங்கள் அவர்களது ஆதார் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இ-கேஒய்சி, லாக்/அன்லாக் ஆதார் மற்றும் பிற அம்சங்களை அவர்களுக்காக நீங்கள் ஒரு பின் நம்பர் மூலம் பயன்படுத்தலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *