Rahu Ketu: ராகு கேது தரும் சொர்க்க வாழ்க்கை இந்த ராசிக்கு தான்
நவகிரகங்களில் எப்போதும் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளக்கூடிய கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றன.
ராகு மற்றும் கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசிகளும் தங்களது பயணத்தை தொடங்கினார்.
இவர்களுடைய பயணம் 2024 ஆம் ஆண்டு முழுவதும் இருக்கும். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளன அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி
ராகு கேது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வியாபாரத்தில் வெற்றிகள் தேடி தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். அனைத்தும் லாபகரமாக அமையும்.
கும்ப ராசி
சனி பகவான் தற்போது உங்கள் மீது பயணம் செய்து வருகிறார். ஏனென்றால் நீங்கள் அவரின் சொந்த ராசியாகும். ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சேமிப்பு அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
மகர ராசி
உங்களுக்கு நல்ல பலன்களை ராகு மற்றும் கேது கொடுக்கப் போகின்றனர். உங்களது தைரியத்தால் கடினமான வேலைகளை செய்து வெற்றி காண்பீர்கள். குருபகவானின் பார்வை உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.