கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்!
கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்!
அதிக நேரம் மொபைல் போன், லேப்டப் பார்ப்பதால் கண்களுக்கு கீழ் கருவையமானது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் முகம் தனது இயற்கை அழகை இழந்து நம்மை சோர்வாக காண்பிக்கும்.
இந்த கருவளையத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை மட்டும் முயற்சித்து வந்தால் போதும். சில தினங்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
*கற்றாழை மடல் – 1
*சோள மாவு – 1 ஸ்பூன்
*எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
செய்முறை…
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை பாத்திரத்திற்கு மாற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொதித்து கொண்டிருக்கும் கற்றாழை பேஸ்ட்டில் ஊற்றி கலக்கி விடவும். கற்றாழை கலவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து அதில் 2 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து ஆற விடவும்.
பின்னர் இதை ஒரு டப்பாவில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். இந்த க்ரீமை கண் கருவளையம் உள்ள இடத்தில் தடவி மஜாஜ் செய்து சில நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தால் முகம் கருவளையம் நீங்கிவிடும். இந்த க்ரீம் முகத்தில் உள்ள பருக்களை நீக்கவும் உதவும்.
தேவைப்படும் பொருட்கள்:-
*உருளைக்கிழங்கு – 1
*கற்றாழை ஜெல் – 1/4 ஸ்பூன்
செய்முறை…
ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். பின்னர் ஒரு வடிகட்டி கொண்டு உருளைக்கிழங்கில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் 1/4 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தால் கருவளையம் சில தினங்களில் கருவளையம் நீங்கிவிடும்.