தயிரை இப்படி பயன்படுத்துங்கள்! குளிர் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!
தயிரை இப்படி பயன்படுத்துங்கள்! குளிர் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!
பனி காலத்தில் நம் அனைவரும் சருமத்தில் வறட்சி ஒரு வித அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது வழக்கம் தான். கை மட்டும் அல்ல உடலில் பல பகுதிகளில் இந்த பாதிப்பு ஏற்படும். குளித்தாலும் சரி, குளிக்காவிட்டாலும் சரி இந்த பாதிப்பு ஏற்படும். பார்க்க வயதானவர்கள் போல் தோற்றத்தை தரும் இந்த சரும பாதிப்பு சரியாக வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.
சரும சுருக்கம், வறட்சி நீங்க தயிர் மற்றும் தேனை பயன்படுத்துங்கள்:-
உங்கள் முகத்திற்கு தேவையான அளவு தயிர் மற்றும் தேன் எடுத்து கலந்து க்ரீம் போல் செய்து கொள்ளவும். இந்த க்ரீமை மேனி முழுவதும் பூசி 1/2 மணி நேரம் வரை விட்டு பின்னர் குளித்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் மேனி மிகவும் மிருதுவாக இருக்கும்.
சரும சுருக்கம், வறட்சி நீங்க தயிர் மற்றும் ஓட்ஸை பயன்படுத்துங்கள்:-
சிறிதளவு தயிரில் 2 ஸ்பூன் அளவு ஓட்ஸ் கலந்து கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் க்ரீம் பதத்திற்கு வரும்.
இந்த க்ரீமை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகச் சுருக்கம், அரிப்பு, வறட்சி நீங்கி அதிக மிருதுவாக இருக்கும்.
முக வறட்சி நீங்க தயிர் மற்றும் பப்பாளி பழத்தை பயன்படுத்துங்கள்:-
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் மற்றும் 2 அல்லது 4 பப்பாளி துண்டுகளை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
இந்த பேஸ்டை குளிக்க செல்வதற்கு முன்னர் முகத்தில் தடவி மஜாஜ் செய்து 5 நிமிடங்களுக்கு பின்னர் வழக்கம் போல் குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவாகவும், வறட்சி ஏற்படாமலும் இருக்கும்.