IND Women vs AUS Women: தொடர்ச்சியா நான்கு அரைசதம் – உலக சாதனை புரிந்த தீப்தி ஷர்மா

இந்தியா மகளிர் – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் முதலில் பேட்டிங் செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 219 ரன்களில் ஆல்அவுட்டானது.

இந்திய பவுலிங்கில் பூஜா வஸ்த்ரகர் 4, சிநேக் ராணா 3, தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி ஷர்மா, பேட்டிங்கிலும் கலக்கினார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 376 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய பேட்டர்களில் ஸ்மிருதி மந்தனா 74, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73, ரிச்சா கோஷ் 52 ரன்கள் எடுத்தனர். தீப்தி ஷர்மா அரைசதம் அடித்ததுடன், 73 ரன்களுடன் நாட் அவுட் பேட்டராக களத்தில் உள்ளார்.

தீப்தி ஷர்மா – பூஜா வஸ்த்ரகர் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதனால் இந்தியா 157 ரன்கள் என மிகப் பெரிய முன்னிலை பெற்றுள்ளது.

26 வயதாகும் தீப்தி ஷர்மா முந்தைய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 67 ரன்கள் அடித்தார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 54 ரன்கள் எடுத்து அந்த போட்டி டிரா ஆக காரணமாக இருந்தார் தீப்தி ஷர்மா.

இதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 66 ரன்கள் அடித்தார். இதன் மூலம் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் அரைசதமடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்தார் தீப்தி ஷர்மா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *