கும்ப ராசிக்கு.. தன வரவு சீராகும்.. முன்னேற்றமான வாழ்க்கை அமையும்..!!
கும்பம் ராசி அன்பர்களே,
இன்று தனவரவு சீராக வந்து கொண்டிருக்கும். பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மனதில் நம்பிக்கையுடன் எந்த செயலிலும் ஈடுபடுங்கள்.
இறைவழிபாட்டில் முழுமையாக ஈடுபடுங்கள். துன்பம் வரும் சூழலில் பரிகாரம் என்ற பெயரில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். இறைவனை மட்டும் முழுமையாக நம்புங்கள். தொழிலில் சராசரியான வரவு இருக்கும்.
சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சமாளிக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயலால் மன வருத்தம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் கவனமாக எந்த பணியிலும் ஈடுபட வேண்டும்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இரவு நேர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்கள் இன்று வாழ்க்கையில் சிறப்பான இடத்தை பிடிக்க முடியும். முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். கல்வியில் சாதிக்க முடியும் உயர் கல்வி சிறப்பாக அமையும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: மூன்று, ஐந்து மற்றும் ஏழு
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்