மீனம் ராசிக்கு.. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி.. திறமைகள் வெளிப்படும்..!!
மீனம் ராசி அன்பர்களே,
இன்று தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். நிதானமாக செயல்பட்டால் முன்னேற்றம் தானாக வரும்.
மனதில் ஒரு விதமான நம்பிக்கை ஏற்படும். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தின் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.
யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது. விருந்து விழாக்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் இன்று அமைதி நிலவும். எடுத்த காரியத்தை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
வரும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் மாறும். திறமைகள் வெளிப்படும். பெண்கள் இன்று எதிலும் அவசரப்பட வேண்டாம். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: திங்க் மற்றும் மஞ்சள் நிறம்