ஒரு காலத்துல இன்னோவாவ பயன்படுத்திய நடிகை.. இப்ப எவ்ளோ ரூபா கொடுத்து காரை வாங்கி இருக்காங்க தெரியுமா!
பெங்களூரு நாட்கள் பட நாயகி மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் என்ன காரை வாங்கி இருக்கின்றார்? அதன் விலை என்ன? மற்றும் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மலையாள இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவரே இஷா தல்வார். இவர் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என இந்தியாவின் பிற மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். தமிழில், ரன் பேபி ரன், மீண்டும் ஒரு காதல் கதை, தில்லு முல்லு உள்ளிட்ட திரைப்படங்களிலே அவர் நடித்திருக்கின்றார்.
இத்தகைய நடிகரே தற்போது மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி ரக சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார்.
மும்பையில் புகழ்பெற்ற பென்ஸ் விற்பனையாளரான ஆட்டோ ஹேங்கர் எனும் டீலர் வாயிலாகவே இந்த காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 73.50 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.
இத்தகைய மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரையே நடிகை தன்னுடைய சொகுசு பயணங்களுக்காக வாங்கி இருக்கின்றார். விலைக்கு ஏற்ப லக்சூரி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மிக பெரிய அளவில் இந்த கார் கொண்டிருக்கும். இதனால்தான், தொழிலதிபர்கள் தொடங்கி திரைநட்சத்திரங்கள் வரை பலர் இந்த ஜிஎல்சி சொகுசு கார் மாடலுக்கு மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றனர்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜிஎல்சி சொகுசு காரின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது. இதனால்தான் இதன் விலை மிகப் பெரிய அளவில் குறைவாக இருக்கின்றது. முந்தைய கால கட்டத்தில் இந்த கார் மாடல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்காக 100 கோடி ரூபாயை மேக்-இன் இந்தியா திட்டத்தின் கீழ் மெர்சிடிஸ் பென்ஸ் முதலீடு செய்திருக்கின்றது. ஜிஎல்சிக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் விற்பனை வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இதன் உற்பத்தியை இந்தியாவில் பென்ஸ் தொடங்கியது. அது தற்போது விற்பனையில் இருப்பது புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும்.
இந்த புதிய தலைமுறை ஜிஎல்சி இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, 300 4மேட்டிக் மற்றும் 220டி 4மேட்டிக் ஆகும். 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு, 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டதே 300 4மேட்டிக் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 254 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும்.
220டி 4 மேட்டிக் தேர்வில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் எஞ்சினே இடம் பெற்றுள்ளது. இந்த மோட்டார் 194.4 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் ஜிஎல்சியில் வழங்கப்படுகின்றது. இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜிற்கு வழி வகுக்கும்.
இந்த காரில் பாதுகாப்பான பயணத்திற்காக ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிரீமியம் மற்றும் லக்சூரியான பயணத்திற்காக 11.9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ஸ் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஒயர்லெஸ் செல்போன் கனெக்டிவிட்டி, ஹெட் அப் திரை, 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட்வியூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களே இஷா போன்ற முன்னணி நடிகர்களை ஜிஎல்சி பக்கம் கவர்ந்துக் கொண்டிருக்கின்றன.