இந்த கலருக்காகவே யமஹா பைக்கின் விற்பனை பிச்சிக்க போகுது!! நீங்க எதிர்பார்க்காத விலையில்…!
2024 யமஹா எஃப்.இசட்-எக்ஸ் (Yamaha FZ-X) பைக்கில் வழங்கப்பட உள்ள புதிய அப்டேட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் புதிய 2024ஆம் ஆண்டை முன்னிட்டு அப்படி என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் யமஹாவின் எஃப்.இசட் பைக்குகளுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும், யமஹா எஃப்.இசட் பைக்குகளிலேயே பெரியதாக விற்பனையாகாதது என்று பார்த்தால், அது எஃப்.இசட்-எக்ஸ் தான். இன்னும் சொல்லப்போனால், இந்த பைக்கை கடந்த சில வருடங்களுக்கு முன்னர்தான் யமஹா இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பைக்கை அப்டேட் செய்யும் பொருட்டு, எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிற்கு 2024ஆம் ஆண்டிற்காக சில அப்டேட்களை யமஹா வழங்குகிறது. இதன்படி, 2024 யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக் மேட் டைட்டன் மற்றும் க்ரோம் என இரு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களை புதியதாக பெற்றுள்ளது.
இதில் புதிய மேட் டைட்டன் பெயிண்ட் ஆப்ஷனில் எஃப்.இசட்-எக்ஸ் பைக் இப்போதில் இருந்தே கிடைகும் எனவும், ஆனால் க்ரோம் பெயிண்ட் ஆப்ஷனில் வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்க முடியும் எனவும் யமஹா சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக் ஏற்கனவே டார்க் மெட்டாலிக் நீலம் மற்றும் மேட் காப்பர் பெயிண்ட் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பழைய பெயிண்ட் ஆப்ஷன்களிலும் தொடர்ந்து இந்த யமஹா பைக்கை வாங்க முடியும். புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,37,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த யமஹா எஃப்.இசட் பைக்கில் 149சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 12.23 பிஎச்பி மற்றும் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மற்றப்படி, தோற்றத்தில் 2024 எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் எந்த மாற்றமும் இல்லை.
எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் புதுமையாக வட்ட வடிவிலான ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் பொருத்தப்படுகின்றன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், முழு எல்இடி இல்லுமினேஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உடன் எல்சிடி திரை, யுஎஸ்பி சாக்கெட், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் சைடு ஸ்டாண்ட் சென்சார் உள்ளிட்டவற்றை எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் யமஹா வழங்குகிறது.
சஸ்பென்ஷனுக்கு எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் முன்பக்கத்தில் 41மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7-ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கும் பொருத்தப்படுகின்றன. பிரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 282மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்படுகின்றன. இந்த பைக்கில் 17 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.