பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயங்குமா? நடப்பது என்ன? – முழு பின்னணி
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு இடையே தற்போது பேருந்துகள் முறையாக இயங்கினாலும் கூட.. பொங்கலுக்கு களமிறக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் மற்ற பேருந்துகள் சரியாக இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது போதிய ஓட்டுனர்கள் கிடைப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம்: 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வருகிறது. அதிமுக ஆதரவு இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு வழங்க ஒருமனதாக முடிவு செய்துள்ளன. ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி, 7 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில்தான் ஸ்டிரைக் நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது திமுக ஆதரவு தொழிற்சங்கம் ஆகும்.
இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.
இரண்டாவதாக, தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் குழப்பம்: ஆனால் பொங்கல் அன்று கூடுதலாக 3-5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். இதை செயல்படுத்த கிட்டத்தட்ட 8 ஆயிரம் ஊழியர்கள் வரை தேவை. இவர்கள் எப்படி இயங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு தற்காலிகமாக தனியார் நிறுவன டிரைவர், ஆம்னி பேருந்து டிரைவர்கள் ஆகியோரை வைத்து பேருந்துகளை இயக்கம் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக பொங்கலுக்கு பணிக்கு வர வேண்டி இருப்பதால் இந்த வாரம் லீவ் எடுத்த ஊழியர்களை இப்போதே வர வைத்து ஓவர் டைம் பார்க்க வைக்கும் முடிவையும் எடுத்துள்ளனர்.