சென்னை நங்கநல்லூர் வந்த மாநகராட்சி கமிஷ்னர் ராதாகிருஷ்ணன்.. அதிரடி ஆக்சன்
சென்னை : சென்னை நங்கநல்லூரில் இரண்டு எருமைகள் 63 வயது முதியவரைக் கொன்ற இடத்தில் கால்நடை உரிமையாளர்களுடன், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.
அப்போது மாடுகளை ஏன் கண்டபடி கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டதோடு, கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்றும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோட்டை சேர்ந்த 63 வயதாகும் சந்திரசேகர் , ரயில்வே தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர், செவ்வாய்கிழமை மாலை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் 2 எருமை மாடுகள் சண்டைபோட்டு கொண்டபடி ஓடி வந்திருக்கின்றன. அந்த மாடுகள் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து, அங்கு சாலையை கடந்து செல்வதற்காக நின்ற சந்திரசேகரை முட்டியதுடன், ஒன்றுக்கொண்டு முட்டி மோதி கொண்டன.
இதில் மாடுகளுக்கு நடுவில் சிக்கிய சந்திரசேகர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் மாடுகளை விரட்டிவிட்டு சந்திரசேகரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.