வீட்டிலிருந்தே ஆதார் அட்டையை எப்படி பெறுவது?. இதோ எளிய வழிமுறைகள்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதன் மூலமாக அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற முடியும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை பெறுவது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக இறுதியில் ஆதார் கார்டை பெற்றுவிடலாம். ஆனால் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஆதார் கார்டை பெற விரும்புபவர்கள் கட்டாயம் பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதே சமயம் முகவரி சான்று, பிறப்பு சான்றிதழ், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் கட்டாயம் வழங்க வேண்டும்.
முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்.
முகப்பு பக்கத்தில் ஆதார் என்பதை தேர்வு செய்து அதில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.
அடுத்ததாக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று உங்களுடைய கைரேகை மற்றும் கண் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
இறுதியாக உங்களுடைய விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆதார் அட்டை வழங்கப்படும். இதனை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.