இந்தியர்கள் எதிர்ப்பு., தயவுசெய்து சுற்றுலாப் பயணிகளை அனுப்புங்கள்: மாலத்தீவு அதிபர் சீனாவிடம் கோரிக்கை
மாலத்தீவுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்புமாறு சீனாவுக்கு அதிபர் முகமது முய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயண விவகாரம் மாலத்தீவு அமைச்சர் எக்ஸின் அறிக்கை சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய சுற்றுலா பயணிகள் தங்களது மாலத்தீவு பயண முன்பதிவை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப அதிக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சீனாவிடம் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவுக்கான தனது ஐந்து நாள் பயணத்தின் இரண்டாவது நாளான செவ்வாயன்று புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய முய்சு, சீனா மாலத்தீவின் “நெருங்கிய” நண்பன் என்று கூறினார்.
சீனாவின் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட BRI திட்டம் மாலைதீவு வரலாற்றில் மிக முக்கியமான திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவுக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் அதிகமாக இருந்தது. இப்போது அதை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது என்றார்.
சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையில் 500 Million Dollar ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மாலத்தீவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலத்தீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட மொஹமட் மொய்சு சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் ஜனவரி 12ஆம் திகதி வரை இந்த சுற்றுப்பயணத்தில் இருப்பார்.
முகமது முய்சுவின் மாலத்தீவின் முற்போக்குக் கட்சியில் சீனா பெரும் செல்வாக்கு செலுத்தும் என நம்பப்படுகிறது.